கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவன் 1,045 ரன்கள் குவித்து அசத்தல் + "||" + Mumbai student scored 1,045 runs for School cricket match

பள்ளி கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவன் 1,045 ரன்கள் குவித்து அசத்தல்

பள்ளி கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவன் 1,045 ரன்கள் குவித்து அசத்தல்
14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான நவிமும்பை கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை அருகில் உள்ள கோபர்னகர்னேவில் நடந்தது.
மும்பை,

யஷ்வந்த்ராவ் சவான் பள்ளி அணிக்காக விளையாடிய தனிஷ்க் கவேட் 2 நாட்கள் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி வியப்பளித்தார். 13 வயதான அவர் 515 பந்துகளில் 149 பவுண்டரி, 67 சிக்சருடன் 1,045 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த போட்டிக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை. அங்கீகாரம் பெற்ற போட்டியாக இது இருந்து இருந்தால் சாதனை ஸ்கோராக அமைந்து இருக்கும். 2016-ம் ஆண்டில் மும்பை வீரர் பிரணாவ் தனவாடே பள்ளி கிரிக்கெட் போட்டியில் 1,009 ரன்கள் குவித்ததே சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.
5. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.