கிரிக்கெட்

ஒரு ஆண்டு தடை முடிந்தது: வெஸ்ட்இண்டீஸ் வீரர் ரஸ்செல் களம் திரும்புகிறார் + "||" + One year ban ended: West Indies player Russell Returns to the field

ஒரு ஆண்டு தடை முடிந்தது: வெஸ்ட்இண்டீஸ் வீரர் ரஸ்செல் களம் திரும்புகிறார்

ஒரு ஆண்டு தடை முடிந்தது: வெஸ்ட்இண்டீஸ் வீரர் ரஸ்செல் களம் திரும்புகிறார்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செலுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

ஜமைக்கா,

உலக ஊக்க மருந்து கழகத்தின் விதிமுறையை பின்பற்றாததால் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செலுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காலம் கடந்த மாதம் 30–ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவர் வருகிற 4–ந் தேதி நடைபெறும் உள்ளூர் போட்டியில் ஜமைக்கா அணிக்காக களம் காணுகிறார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஸ்செல்லை அந்த அணி நிர்வாகம் இந்த சீசனில் ரூ.8½ கோடிக்கு தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.