கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:இலங்கை அணி 504 ரன்கள் குவிப்புகுசல் மென்டிஸ் சதம் அடித்தார் + "||" + First Test against Bangladesh: The Sri Lankan team scored 504 runs

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:இலங்கை அணி 504 ரன்கள் குவிப்புகுசல் மென்டிஸ் சதம் அடித்தார்

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:இலங்கை அணி 504 ரன்கள் குவிப்புகுசல் மென்டிஸ் சதம் அடித்தார்
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 504 ரன்கள் குவித்துள்ளது. குசல் மென்டிஸ் 196 ரன்கள் விளாசினார்.
சிட்டகாங்,

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 504 ரன்கள் குவித்துள்ளது. குசல் மென்டிஸ் 196 ரன்கள் விளாசினார்.

முதலாவது டெஸ்ட்

இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 513 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து இருந்தது. குசல் மென்டிஸ் (83 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (104 ரன்) களத்தில் இருந்தனர்.


3-வது நாளான நேற்று இலங்கை வீரர்களின் ஆதிக்கம் நீடித்தது. நிலைத்து நின்று ஆடிய குசல் மென்டிஸ் தனது 4-வது சதத்தை எட்டினார். அவருக்கு நேற்று 23-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அணியின் ஸ்கோர் 308 ரன்னாக உயர்ந்த போது, 2-வது விக்கெட் ஜோடி பிரிந்தது. அபாரமாக ஆடிய தனஞ்ஜெயா டி சில்வா (173 ரன்கள், 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

குசல் மென்டிஸ் 196 ரன்


அடுத்து ரோஷன் சில்வா, குசல் மென்டிஸ்சுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணையும் நேர்த்தியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இரட்டை சதத்தை நெருங்கிய குசல் மென்டிஸ் (196 ரன்கள், 327 பந்துகளில் 22 பவுண்டரி, 2 சிக்சருடன்) துரதிர்ஷ்டவசமாக தைஜூல் இஸ்லாம் பந்து வீச்சில் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 138 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 504 ரன்கள் குவித்துள்ளது. ரோஷன் சில்வா 87 ரன்களுடனும், கேப்டன் சன்டிமால் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.