தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவு: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து டு பிளஸி விலகல்


தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவு: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து டு பிளஸி விலகல்
x
தினத்தந்தி 3 Feb 2018 9:22 AM GMT (Updated: 3 Feb 2018 2:03 PM GMT)

ஒருநாள் போட்டி தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளஸி காயம் காரணம் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. #IndvsSa

டர்பன்,

கை விரல் எழும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் 20 ஓவர் போட்டித்தொடரில் இருந்தும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளஸி விலகியுள்ளார். ஏற்கனவே, இந்தியாவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், டு பிளஸி விலகியிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியின் போது, தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளசிஸ்க்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் மருத்துவ சிகிச்சையின் போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கைவிரலில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தக் காயம் குணமாக ஏறக்குறைய 6 வாரங்கள் ஆகும் என்பதால், அதுவரை டூபளசிஸிஸ் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்து நடைபெறும் ஒரு நாள் போட்டிகள், டி20 போட்டித் தொடரில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

டூபிளசிக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியில் பர்ஹான் பெஹார்டியனும், ஹெயின்ரிச் கிளாசென் கூடுதல் விக்கெட் கீப்பராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.கேப்டன் பொறுப்பை மார்கிராம்   ஏற்று செயல்படுவார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

Next Story