கிரிக்கெட்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மலிங்கா சூசகம் + "||" + Malinga mulls retirement, says mentally done with cricket

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மலிங்கா சூசகம்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மலிங்கா சூசகம்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சூசகமாக தெரிவித்துள்ளார்.
செயிண்ட் மொரிட்ஸ்,

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சாத்தியம் அதிகம் உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சூசகமாக தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த மலிங்கா தனது ஓய்வு குறித்து கூறியதாவது:- “  மன ரீதியாக கிரிக்கெட் விளையாடுவதை நிறைவு செய்துவிட்டேன். இனிமேலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என நான் கருதவில்லை. விரைவில் எனது ஓய்வு முடிவை நான் அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்.  இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் நான் இன்னும் பேசவில்லை. 

நான் இலங்கை திரும்பியதும், எனது உடல் எவ்வாறு ஒத்துழைப்பு தருகிறது என்பதை தெரிந்து கொள்ள உள்ளூர் போட்டிகளில் மீண்டும் கலந்து கொள்வேன். ஆனால், தற்போது நான் இனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவதும் முடிவுக்கு வந்துவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புதிய அத்தியாத்தை நான் துவங்க உள்ளேன். நான் இனிமேல் கிரிக்கெட்  விளையாடாமல்  கூட போகலாம்” என்றார்.  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்து வீச்சு ஆலோசகராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.