கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி + "||" + Women in South Africa Comfort Success

தென்ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி

தென்ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது
போட்செப்ஸ்ட்ரூம்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தீப்தி ஷர்மா (79 ரன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (56 ரன்) அரைசதம் அடித்தனர். நட்சத்திர மங்கைகள் மந்தனா (0), கேப்டன் மிதாலி ராஜ் (4 ரன்) சோபிக்கவில்லை. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. மிக்னோன் டு பிரீஸ் 90 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். முன்னதாக முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.