கிரிக்கெட்

4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி + "||" + 4th one-day cricket match: South Africa team win

4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி

4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோகன்னெஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னெஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் (5) ரன்களில் ரபடாவின் பந்து வீச்சில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  அவருடன் விளையாடிய ஷிகர் தவான் 18.2வது ஓவரில் அரை சதம் அடித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து தவானுடன் இணைந்து விளையாடிய கேப்டன் விராட் கோஹ்லி 21.2வது ஓவரில் அரை சதம் அடித்துள்ளார். இந்த நிலையில் ஷிகர் தவான் 33.1வது ஓவரில் தனது 100வது போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

கோஹ்லி (75) 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் ஆட்டமிழந்துள்ளார்.  இந்த நிலையில், தவான் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்களுடனும், ரஹானே (8) ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து ஷ்ரேயாஸ் சந்தோஷ் (18), பாண்ட்யா (9), புவனேஷ்குமார் (5) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  தோனி (42) மற்றும் குல்தீப் யாதவ் (0) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது.  இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 290 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து தென்ஆப்பிரிக்கா அணி விளையாடிய போது மழையினால் இரு முறை ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி, தென்ஆப்பிரிக்காவிற்கு 28 ஓவரில் 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

202 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 25.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. மெல்போர்ன் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
மெல்போர்னில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 231 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
4. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா திணறல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.