கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் இனவெறி புகார் + "||" + On the Indian fan South African player Imran Tahir racist complaint

தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் இனவெறி புகார்

தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் இனவெறி புகார்
இந்திய ரசிகர் மீது தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் இனவெறி புகார் அளித்துள்ளார்.
போர்ட்எலிசபெத்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், இந்தியாவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் களம் இறங்கவில்லை. 12-வது வீரராக இருந்த அவர் சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லுகையில் சில ரசிகர்கள் அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இம்ரான் தாஹிர் உடனடியாக ஸ்டேடிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். உடனடியாக அந்த ரசிகர் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்பட்டார். அந்த ரசிகர் இந்திய அணி வீரர்கள் அணிவது போன்ற சீருடை அணிந்து இருந்தார். தன்னை இனவெறியுடன் ரசிகர் திட்டியதாக இம்ரான் தாஹிர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ரசிகர்களுடன் இம்ரான் தாஹிர் விவாதம் செய்யும் வீடியோ டிவிட்டரில் வெளியாகி இருக்கிறது.