கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் ஆந்திரா அணி 5-வது வெற்றி + "||" + Vijay Hazare Cup Cricket Andhra team win 5th

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் ஆந்திரா அணி 5-வது வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் ஆந்திரா அணி 5-வது வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆந்திரா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.
சென்னை,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் முருகப்பா மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஆந்திரா-குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 50 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ருஜூல் பாத் 74 ரன்னும், பியுஷ் சாவ்லா 56 ரன்னும், பார்த்தீவ் பட்டேல் 39 ரன்னும் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் கார்த்திக் ராமன் 4 விக்கெட்டும், அய்யப்பா, நரேன் ரெட்டி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய ஆந்திரா அணி 45.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் ஹெப்பர் 99 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்ரீகர் பரத் 106 ரன்னும், கேப்டன் ஹனுமா விஹாரி 39 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய ஆந்திரா அணி 5-வது வெற்றியை தனதாக்கியது. குஜராத் சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

எஸ்.எஸ்.என். கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி, கோவாவை எதிர்கொண்டது. முதலில் ஆடிய கோவா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அஸ்னோட்கர், பிரபுதேசாய் தலா 56 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆடிய மும்பை அணி 46.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 71 ரன்னும், ஆதித்ய தாரே 59 ரன்னும், பிரித்வி ஷா 53 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். கோவா அணி சந்தித்த 3-வது தோல்வி இது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் ராஜஸ்தான்-மத்தியபிரதேச அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த மத்தியபிரதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆதித்ய கார்வால் 108 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ராஜஸ்தான் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். மத்தியபிரதேச அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின. இதில் மும்பை அணி சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது.
2. துளிகள்
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.
3. துளிகள்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. விஜய் ஹசாரே கோப்பை: தமிழகம், மும்பை அணிகள் வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழகம், மும்பை அணிகள் வெற்றிபெற்றன.
5. விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, புதுச்சேரி அணிகள் வெற்றி
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை, புதுச்சேரி அணிகள் வெற்றிபெற்றன.