ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே நியமனம்


ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே நியமனம்
x
தினத்தந்தி 13 Feb 2018 12:45 PM GMT (Updated: 13 Feb 2018 12:44 PM GMT)

ஐ.பி.எல் கிரிக்கெட் அணியில் விளையாடும் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்னே நியமிக்கப்பட்டுள்ளார். #RajasthanRoyals

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2008- ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை   சாம்பியன் அணியாக உயர்த்திய பிறகு,  10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஷேன் வார்னே அணி திரும்பியுள்ளார்.

“ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, என் கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தில் ராஜஸ்தான் அணிக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு. அணி உரிமையாளர்களும் ரசிகர்களும் காட்டிய அன்பை நினைக்கையில் எனக்கு புல்லரிக்கிறது. இந்த முறை வலுவான, ஆற்றல் நிறைந்த இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்களுடன் பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்” என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008-2011 ஐபிஎல் தொடர்களில் ஆடிய ஷேன் வார்ன் 55 போட்டிகளில் 57 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Next Story