இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணிக்கு கேப்டனாக டுமினி நியமனம்


இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணிக்கு கேப்டனாக டுமினி நியமனம்
x
தினத்தந்தி 13 Feb 2018 8:45 PM GMT (Updated: 13 Feb 2018 8:20 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நிறைவடைந்ததும் அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி மோத உள்ளது.

போர்ட் எலிசபெத்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நிறைவடைந்ததும் அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி மோத உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 18–ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. 20 ஓவர் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விரலில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஏற்கனவே விலகி விட்டார். அவருக்கு பதிலாக டுமினி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கிறிஸ்டியான் ஜோங்கர், ஜூனியர் டாலா, ஹென்ரிச் கிளாசென் ஆகிய புதுமுகங்களும் தேர்வாகி உள்ளனர்.

இந்த தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதை மனதில் வைத்து ஒரு நாள் தொடரின் பொறுப்பு கேப்டன் மார்க்ராம், அம்லா, இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்க அணி வருமாறு:– டுமினி (கேப்டன்), பெஹர்டைன், ஜூனியர் டாலா, டிவில்லியர்ஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியான் ஜோங்கர், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பேட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, பெலக்வாயோ, தப்ரைஸ் ‌ஷம்சி, ஜான் ஸ்மட்ஸ்.


Next Story