கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி + "||" + Over 20 cricket against South Africa: Indian women's team win

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

போட் செப்ஸ்ட்ரூம்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. இதில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை இந்திய அணி 18.5 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மிதாலிராஜ் 54 ரன்களும் (48 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), வேதா கிருஷ்ணமூர்த்தி 37 ரன்களும் (22 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி களத்தில் இருந்தனர். 2–வது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.