கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் டெல்லி அணிக்கு முதல் தோல்வி + "||" + Vijay Hazare Cup Cricket The first defeat of the Delhi team

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் டெல்லி அணிக்கு முதல் தோல்வி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் டெல்லி அணிக்கு முதல் தோல்வி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தர்மசாலாவில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் டெல்லி–கேரளா அணிகள் மோதின.

தர்மசாலா,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தர்மசாலாவில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் டெல்லி–கேரளா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 56 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. துருவ் ஷோரேய் (71 ரன்), மிலின்ட்குமார் (25 ரன்), கேப்டன் சங்வான் (25 ரன்) ஆகியோர் சற்று நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். டெல்லி அணி 39.3 ஓவர்களில் 177 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. கேரள அணி தரப்பில் நிதேஷ் 4 விக்கெட்டும், பானோஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய கேரளா அணி 35.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சச்சின் பேபி 52 ரன்னும், சஞ்சு சாம்சன் 29 ரன்னும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நவ்தீப் சைனி 4 விக்கெட்டும், குல்வந்த் கெஜ்ரோலியா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். தொடர்ந்து 4 ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். கேரளா அணி பெற்ற 2–வது வெற்றி இது.தொடர்புடைய செய்திகள்

1. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
3. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.
4. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
5. ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, தவான் முன்னேற்றம் ஆல்–ரவுண்டரில் ரஷித்கான் முதலிடம்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.