கிரிக்கெட்

ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் சென்னை –மும்பை அணிகள் மோதல் + "||" + IPL Table Release: In the opening match Chennai Mumbai teams clash

ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் சென்னை –மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: தொடக்க ஆட்டத்தில் சென்னை –மும்பை அணிகள் மோதல்
8 அணிகள் பங்கேற்கும் 11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஏப்ரல் 7–ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். திருவிழா மே 27–ந்தேதி வரை நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

இந்த சீசனில் நேரம் மாற்றப்பட்டு மாலை 5.30 மணி, இரவு 7 மணிகளில் ஆட்டங்கள் தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. போட்டி நேரத்தை மாற்றுவதற்கு அணிகளின் உரிமையாளர்களும், ஒளிபரப்பு நிறுவனத்தாரும் எதி£ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேரத்தை மறுபடியும் ஐ.பி.எல். நிர்வாகம் மாற்றியுள்ளது. முந்தைய ஆண்டுகள் போலவே இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும். ஒரே நாளில் இரண்டு ஆட்டம் இடம்பெறும் போது ஒரு ஆட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும்.

9 நகரங்களில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறுவதும் அடங்கும். அதே சமயம் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டி திரும்புகிறது. சென்னையில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இங்கு ஏப்ரல் 10–ந்தேதி நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்– கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.