வெளிநாட்டு தொடர்களில் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சகாலும் முக்கிய பங்காற்றுவார்கள்: தெண்டுல்கர் நம்பிக்கை


வெளிநாட்டு தொடர்களில் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சகாலும் முக்கிய பங்காற்றுவார்கள்: தெண்டுல்கர் நம்பிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2018 12:18 PM GMT (Updated: 17 Feb 2018 12:18 PM GMT)

வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் தொடர்களில் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சகாலும் முக்கிய பங்காற்றுவார்கள் என்று தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #SachinTendulkar

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சில்  குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சகால் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அண்மையில் முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரிலும் இந்த ஜோடி அற்புதமாக பந்து வீசி, விக்கெட்டுகளை அள்ளியது. இந்த நிலையில், வெளிநாட்டு தொடர்களில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சகால் முக்கிய பங்காற்றுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சச்சின் தெண்டுல்கர் கூறியதாவது:- “ நாம் பேட்டிங் பற்றி பேசும் போது, எடுக்க கூடிய  ரன்கள் பற்றி நாம் பேசுகிறோம். அதேவேளையில், நடு ஓவர்களில், இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசுவதால்தான் நாம் வெற்றியை பெறுகிறோம். யுஸ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவை எப்படி எதிர்கொள்வது என்பதை கிரிக்கெட் உலகம் இன்னும் கண்டறியவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story