தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி
x
தினத்தந்தி 18 Feb 2018 8:45 PM GMT (Updated: 18 Feb 2018 7:02 PM GMT)

தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 3–வது ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17.5 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 160 ரன்கள் வரை இந்தியா எடுக்க வாய்ப்பு தென்பட்ட நிலையில் கடைசி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் பின்னடைவாக அமைந்தது. மந்தனா (37 ரன்) ஹர்மன்பிரீத் கவுர் (48 ரன்), வேதா கிருஷ்ணமூர்த்தி (23 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கில் வீழ்ந்தனர். நட்சத்திர வீராங்கனை மிதாலிராஜ் ‘டக்–அவுட்’ ஆனார். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ‌ஷப்னிம் இஸ்மாயில் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுனே லுஸ் 41 ரன்களும், ஜோ டியோன் 34 ரன்களும் எடுத்தனர். முன்னதாக முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டிருந்தது. 4–வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story