கிரிக்கெட்

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை மோதல். + "||" + 3 nations 20 ODI cricket: India-Sri Lanka clash in the opening match.

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை மோதல்.

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை மோதல்.
3 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 6-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை இலங்கையில் நடக்கிறது.
கொழும்பு,

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 6-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியுடன் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். டி ஸ்போர்ட் சேனல் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-

மார்ச். 6: இந்தியா-இலங்கை, மார்ச். 8: இந்தியா-வங்காளதேசம், மார்ச்.10: இலங்கை-வங்காளதேசம், மார்ச்.12: இந்தியா-இலங்கை, மார்ச்.14: இந்தியா-வங்காளதேசம், மார்ச்.16: இலங்கை-வங்காளதேசம், மார்ச்.18: இறுதிப்போட்டி.