கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் : கால்இறுதி ஆட்டம் இன்று தொடக்கம் + "||" + Vijay Hazare Cup Cricket: Call of Fame started today

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் : கால்இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் : கால்இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது
புதுடெல்லி, பிப்.21-

28 அணிகள் கலந்து கொண்ட விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவில் பரோடா, கர்நாடகா (ஏ பிரிவு), மராட்டியம், டெல்லி (பி பிரிவு), ஆந்திரா, மும்பை (சி பிரிவு), ஐதராபாத், சவுராஷ்டிரா (டி பிரிவு) ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. 3 நாள் ஓய்வுக்கு பிறகு கால்இறுதி ஆட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை 9 மணிக்கு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டெல்லி பாலம் ‘ஏ’ மைதானத்தில் காலை 9 மணிக்கு நடக்கும் 2-வது கால்இறுதி ஆட்டத்தில் மும்பை-மராட்டியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.