கிரிக்கெட்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான பெண்கள் 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து + "||" + Women between India and South Africa have been canceled by 20 overs due to rain

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான பெண்கள் 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான பெண்கள் 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து
முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.
செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா - இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது விக்கெட் கீப்பர் லிசெலி லீ (58 ரன், 2 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் டேன் வான் நீகெர்க் (55 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்திருந்தனர்.


தொடர்ந்து மழை பெய்ததாலும், அடுத்து இதே மைதானத்தில் ஆண்கள் 20 ஓவர் போட்டியை தொடங்க வேண்டி இருந்ததாலும் 2 மணி நேர காத்திருப்புக்கு பிறகு இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நாளை மறுதினம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.
2. ஐதராபாத் டெஸ்ட்: இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்ப்பு
ஐதராபாத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோஸ்டன் சேசின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஸ்டன் சேசின் அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை சமாளித்தது.
4. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 4-வது ஒரு நாள் போட்டி: வேறு மைதானத்திற்கு மாற்றம்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான, 4-வது ஒரு நாள் போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
5. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 ‘விங் லூங்–2’ ஆளில்லா விமானங்களை வாங்குகிறது
சீனாவிடம் இருந்து 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.