கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் கர்நாடக அணி அரைஇறுதிக்கு தகுதி + "||" + Vijay Hazare Trophy Coronation team qualifies for semi-final

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் கர்நாடக அணி அரைஇறுதிக்கு தகுதி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் கர்நாடக அணி அரைஇறுதிக்கு தகுதி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி சுற்று நேற்று தொடங்கியது.
புதுடெல்லி,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மயங்க் அகர்வால் சதத்தால் கர்நாடக அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி சுற்று நேற்று தொடங்கியது. இதில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடகா-ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 140 ரன்களும் (12 பவுண்டரி, 7 சிக்சர்) ரவிகுமார் சமர்த் 125 ரன்களும் (13 பவுண்டரி) விரட்டினர். கேப்டன் கருண் நாயர் 10 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். ஐதராபாத் அணி தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், ரவிகிரண் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 42.5 ஓவர்களில் 244 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதன் மூலம் கர்நாடகா அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. ஸ்ரேயாஸ் கோபால் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

டெல்லி பாலம் ‘ஏ’ மைதானத்தில் நடந்த மற்றொரு கால்இறுதியில் மும்பை அணி, மராட்டியத்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 69 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 35 ரன்னும் சேர்த்தனர்.

தொடர்ந்து ஆடிய மராட்டிய அணி 46.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஸ்ரீகாந்த் முண்டே (70 ரன்), நவ்ஷத் ஷாயக் (51 ரன்) அரைசதம் அடித்தனர்.