கிரிக்கெட்

விரும்பினால் வீராட் கோலிக்கு 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இருந்து ஒய்வு - பிசிசிஐ + "||" + If Virat Kohli wants to rest for tri-nation series, he will get it: BCCI

விரும்பினால் வீராட் கோலிக்கு 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இருந்து ஒய்வு - பிசிசிஐ

விரும்பினால் வீராட் கோலிக்கு 3 நாடுகள் 20 ஓவர்  போட்டியில் இருந்து ஒய்வு - பிசிசிஐ
இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டியில் வீராட்கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #Viratkohli #BCCI
மும்பை, 

வீராட்கோலி தலைமையிவான இந்திய கிரிக்கெட் அணி தற்பேது தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. வருகிற 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

அடுத்து இந்திய அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. 3-வது நாடாக வங்காளதேசம் கலந்து கொள்கிறது.

இந்தப்போட்டி மார்ச் 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொழும்பு பிரேம தாச மைதானத்தில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இருந்து கேப்டன் வீராட்கோலி விலகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அவர் ஓய்வு கேட்க இருக்கிறார்.

இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டியில் வீராட்கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

இலங்கையில் நடை பெறும் போட்டியில் இருந்து வீராட்கோலி ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். விளை யாடுவதா? வேண்டாமா? என்பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த சீசனில் கடைசி தொடர் என்பதால் அவர் விளையாடவே விரும்பலாம். இதன்பிறகு ஐ.பி.எல். போட்டி தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
2. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்
ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.
3. நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது : டோனிக்கு காம்பீர் எச்சரிக்கை
டோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4. ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது
5. 20 ஓவர் கிரிக்கெட்டில் சீனாவுக்கு எதிராக 11 பந்துகளில் வெற்றி பெற்ற நேபாளம்
பல்வேறு போட்டிகளில் தங்கத்தை குவிக்கும் சீனா கிரிக்கெட்டில் மட்டும் மண்ணை கவ்வுகிறது. 11 பந்துகளில் பந்தாடியது நேபாளம்.