கிரிக்கெட்

‘இதைவிட சிறப்பாக ஆட முடியும்’- மனிஷ் பாண்டே + "||" + 'Can be better than that' - Manish Pandey

‘இதைவிட சிறப்பாக ஆட முடியும்’- மனிஷ் பாண்டே

‘இதைவிட சிறப்பாக ஆட முடியும்’- மனிஷ் பாண்டே
இன்னும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அரைசதம் அடித்த இந்திய வீரர் 28 வயதான மனிஷ் பாண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘எனது கிரிக்கெட் வாழ்க்கை ஏற்றம்-இறக்கம் கொண்டதாக இருப்பது குறித்து கேட்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வாய்ப்புக்காக காத்திருப்பது கொஞ்சம் கடினமாகவே உள்ளது. அது மன ரீதியிலான குடைச்சலாகவும் இருக்கிறது. ஆனால் நிறைய நட்சத்திர வீரர்களும், ஜாம்பவான்களும் இருக்கும் இந்தியா போன்ற அணிக்காக விளையாடும் போது வாய்ப்புக்காக காத்திருந்து தான் ஆக வேண்டும்.


பெரும்பாலான நேரங்களில் நான் 5-வது பேட்டிங் வரிசையில் ஆடுகிறேன். இன்னும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நமது அணியில் டாப் வரிசை சிறப்பாக உள்ளது. டாப் வரிசை வீரர்களே 30 முதல் 35 ஓவர்களை விளையாடி விடுகின்றனர். அதன் பிறகு கோலி, டோனி போன்ற வீரர்கள் எனக்கு முன்பாக இறங்க வேண்டி உள்ளது. கூடுதல் நேரம் பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தால் எனது பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய முடியும். தற்போது நான் எப்படி விளையாடி வருகிறேனோ அதை விட இன்னும் என்னால் அதிகமான ரன்கள் குவிக்க முடியும்.’ என்றார்.

செஞ்சூரியன் எனக்கு பிடித்தமான மைதானங்களில் ஒன்று. இங்கு தான் 9-10 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சதம் அடித்தேன். அது இன்னும் நினைவில் நிற்கிறது என்றும் பாண்டே குறிப்பிட்டார்.