கிரிக்கெட்

மோசமான பந்துவீச்சு-யுஸ்வேந்திர சாஹல் + "||" + Worst bowling - Usuendra Sahal

மோசமான பந்துவீச்சு-யுஸ்வேந்திர சாஹல்

மோசமான பந்துவீச்சு-யுஸ்வேந்திர சாஹல்
20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய பவுலர் ஒருவரின் மோசமான பந்து வீச்சு இது தான்.
இந்த ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்களில் 7 சிக்சர் உள்பட 64 ரன்களை வாரி வழங்கினார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய பவுலர் ஒருவரின் மோசமான பந்து வீச்சு இது தான். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் ஜோகிந்தர் ஷர்மா 57 ரன்கள் விட்டுக்கொடுத்ததே மோசமான பந்து வீச்சாக இருந்தது. 20 ஓவர் ஆட்டம் ஒன்றில் அதிக சிக்சர்களை வழங்கிய இந்தியரும் இவர் தான். வள்ளலாக மாறிய யுஸ்வேந்திர சாஹலே, 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பந்து வீச்சையும் (கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 6-25) பதிவு செய்திருக்கிறார்.