விராட் கோலியிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறேன் ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் சொல்கிறார்


விராட் கோலியிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறேன் ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் சொல்கிறார்
x
தினத்தந்தி 23 Feb 2018 11:15 PM GMT (Updated: 23 Feb 2018 10:06 PM GMT)

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறேன் ஆஸ்திரேலிய கேப்டன்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ள முடியுமோ அதை கற்றுக்கொள்கிறேன். சில நேரம் அவர்களை போல் பேட் செய்யவும் முயற்சிக்கிறேன். இந்திய கேப்டன் விராட் கோலியிடம் இருந்து, அவர் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது கைகளை எப்படி வைத்திருப்பார், ஆப்-சைடில் பந்தை விரட்டும் போது கடைபிடிக்கும் யுக்திகள் ஆகியவற்றை கொஞ்சம் கற்றுக்கொண்டுள்ளேன். தொடர்ந்து கற்கவும் முயற்சி மேற்கொள்கிறேன். தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்சிடம் இருந்தும் சில விஷயங்களை கற்று இருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் போன்று பந்தை சற்று தாமதமாக எதிர்கொள்ளும் பாணியை முயற்சித்து பார்த்தேன்.

ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்று இல்லாமல் இந்தியாவில் பேட் செய்யும் போது பந்து பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடம் செல்லும் வாய்ப்பு குறைவு. அதனால் இந்தியாவில் விளையாடும் போது பேட்டை பிடிக்கும் விதத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து கொள்வேன்.

இவ்வாறு ஸ்டீவன் சுமித் கூறினார்.

Next Story