கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு + "||" + Test against Australia: South Africa squad announcement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
டர்பன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் ஹென்ரிச் கிளாசென், வியான் முல்டெர் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள கேப்டன் பிளிஸ்சிஸ், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணி வருமாறு:-


பாப் டுபிளிஸ்சிஸ் (கேப்டன்), அம்லா, பவுமா, குயின்டான் டி காக், புருன், டிவில்லியர்ஸ், டீன் எல்கர், ஹென்ரிச் கிளாசென், கேஷவ் மகராஜ், மார்க்ராம், மோர்னே மோர்கல், வியான் முல்டெர், நிகிடி, பிலாண்டர், ரபடா.