கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம் + "||" + The teams. Steven Summit appointed as captain of Rajasthan Royals

ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்

ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்.
புதுடெல்லி,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ஆண்டு தடைக்கு பிறகு மீண்டும் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. இந்த சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் சுமித் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் வார்னே பேசுகையில், ‘கேப்டன் பதவி மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெவ்வேறு நாடுகளில் இருந்து அணியில் இடம் பிடித்து இருக்கும் வீரர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட வைக்க வேண்டியது கேப்டனின் பொறுப்பாகும். ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் சுமித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ரஹானே ஆகிய வீரர்களுக்கு அணியை வழிநடத்தக்கூடிய திறமை உண்டு என்பதை அறிவேன். எங்கள் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித்தை அறிவிக்கிறேன்’ என்று தெரிவித்தார். ஐ.பி.எல். போட்டி அணியின் கேப்டன் நியமனம் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 152 ரன்களை வெற்றி இலக்காக நிா்ணயம்
11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 152 ரன்களை வெற்றி இலக்காக நிா்ணயித்துள்ளது. #IPL2018
2. ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் இடையேயான ஆட்டம் மழையால் பாதிப்பு
ஜெய்பூரில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. #IPL
3. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பந்து வீச முடிவு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. #IPL
4. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் தடுமாற்றம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரா்கள் தடுமாற்றத்துடன் விளையாடி பெவிலியன் திரும்பினா். #IPL2018 #RR #SRH