முத்தரப்பு இருபது ஓவர் போட்டியில் கோலி, தோனிக்கு ஓய்வு


முத்தரப்பு இருபது ஓவர் போட்டியில் கோலி, தோனிக்கு ஓய்வு
x
தினத்தந்தி 25 Feb 2018 10:36 AM GMT (Updated: 25 Feb 2018 10:36 AM GMT)

இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடரில் கேப்டன் கோலி, விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது #bcci

நியூ டெல்லி,

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை இடையே நடைபெறவிருக்கும் முத்தரப்பு இருபது ஓவர் போட்டியானது வரும் மார்ச் 6 ஆம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் இத்தொடரில் களமிறங்குகின்றனர்.

மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, புவனேஷ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. ”வீரர்களின் பணிச்சுமையையும், வரவிருக்கும் தொடர்களை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வேகப்பந்து வீச்சாளர்களின் செயல் திறனை அதிகரிக்கவும், காயங்களில் இருந்து தடுக்கவும் வாய்ப்பாக அமையும். மேலும் இத்தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக ரோஹிஷ் சர்மா செயல்படுவார்” என தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியுள்ளார்.

இந்திய அணி விபரம் வருமாறு,

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வெந்திர சாஹல், அக்ஸர் படேல், விஜய் சங்கர், சர்துல் தாகுர், ஜெய்தேவ் உனத்கட், முகம்மது சிராஜ், ரிஷாப் பாந்த்.



Next Story