கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா + "||" + Vijay hazarey cricket Sourashtra in the final

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா
சவுராஷ்டிரா- ஆந்திரா அணிகள் நேற்று மோதின.
புதுடெல்லி,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 2-வது அரைஇறுதியில் சவுராஷ்டிரா- ஆந்திரா அணிகள் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மோதின. முதலில் பேட் செய்த புஜாரா தலைமையிலான சவுராஷ்ரா அணி 49.1 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ஆர்பிட் வசவதா 58 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 56 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய ஆந்திர அணி 45.3 ஓவர்களில் 196 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா-கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.