கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மோர்னே மோர்க்கல் அறிவிப்பு + "||" + South African fast bowler Morne Morkel to retire from international cricket after Australia series

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மோர்னே மோர்க்கல் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் இருந்து  ஓய்வு பெற உள்ளதாக மோர்னே மோர்க்கல் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மோர்னே மோர்க்கல் அறிவித்துள்ளார். #MorneMorkel
ஜோகன்னஸ்பர்க்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது.  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்  மோர்னே மோர்க்கல்  அறிவித்துள்ளார். 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மோர்னே மோர்க்கல் 294 விக்கெட்டுகளையும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.