கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்இறுதிப்போட்டியில் கர்நாடகம்-சவுராஷ்டிரா இன்று மோதல் + "||" + Vijay Hazare Cup Cricket

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்இறுதிப்போட்டியில் கர்நாடகம்-சவுராஷ்டிரா இன்று மோதல்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்இறுதிப்போட்டியில் கர்நாடகம்-சவுராஷ்டிரா இன்று மோதல்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கர்நாடகம்-சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புதுடெல்லி, பிப்.27-

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கர்நாடகம்-சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வினய்குமார் தலைமையிலான கர்நாடக அணி தனது பிரிவில் (ஏ) லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லா ஆட்டத்துடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்ததுடன், கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்தையும், அரைஇறுதி ஆட்டத்தில் மராட்டியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெய்தேவ் ஷா தலைமையிலான சவுராஷ்டிரா அணி தனது பிரிவில் (டி) லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 2-வது இடம் பெற்றதுடன், கால்இறுதியில் பரோடாவையும், அரைஇறுதியில் ஆந்திராவையும் சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இன்றைய ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. கர்நாடக அணியில் மயங்க் அகர்வால், கருண்நாயர் உள்ளிட்ட சிறந்த வீரர்களும், சவுராஷ்டிரா அணியில் ரவீந்திர ஜடேஜா, புஜாரா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் உள்ளனர். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது.