கிரிக்கெட்

களத்தில் தேவைக்கு ஏற்ப ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும்கோலிக்கு, ஸ்டீவ்வாக் அறிவுரை + "||" + Depending on the need for the field You have to show aggression

களத்தில் தேவைக்கு ஏற்ப ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும்கோலிக்கு, ஸ்டீவ்வாக் அறிவுரை

களத்தில் தேவைக்கு ஏற்ப ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும்கோலிக்கு, ஸ்டீவ்வாக் அறிவுரை
களத்தில் தேவைக்கு ஏற்ப ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலிக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ்வாக் அறிவுரை வழங்கியுள்ளார்.
மொனாக்கோ,

களத்தில் தேவைக்கு ஏற்ப ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலிக்கு, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ்வாக் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஸ்டீவ்வாக் பேட்டி


மொனாக்கோவில் நடந்த விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவுக்கு சென்றிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-


தென்ஆப்பிரிக்க பயணத்தில், இந்திய கேப்டன் விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்தேன். இதில் அவரது ஆக்ரோஷமான போக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஒரு கேப்டனாக அவர் கற்றுக்கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது. கேப்டன்ஷிப்பில் அவர் இன்னமும் முன்னேற்றம் கண்டு வருகிறார்.

அணியில் உள்ள எல்லா வீரர்களும் தன்னை போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை உணர வேண்டும். உதாரணமாக, ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் மிகவும் அமைதியாக செயல்படக்கூடியவர்கள். சில வீரர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஆக்ரோஷத்தை கூட்ட வேண்டும். சில நேரங்களில் ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

நம்பர் ஒன் இடம்

தற்போது இந்திய அணியை அவர் அபாரமாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார். மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வீரராக காணப்படுகிறார். அதனால் தான் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தன்னை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். ஒவ்வொரு முறையும் நேர்மறையான எண்ணத்துடன் விளையாடி முடிந்தவரை சீக்கிரமாகவெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

சில ஆண்டுகளாக எல்லா வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணி கணிசமான வெற்றிகளை குவித்து வருகிறது. மூன்று வடிவிலான போட்டிகளிலும் தங்கள் அணி ‘நம்பர் ஒன்’ ஆக இருக்க வேண்டும் என்பதே கோலியின் நோக்கம். ஆனால் இந்த காலக்கட்டத்தில் இச்சாதனையை செய்வது மிகவும் கடினம்.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் (இந்த ஆண்டின் கடைசியில் 4 டெஸ்ட்) எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள். சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். இந்தியா அவர்களது இடத்தில் எப்படியோ அதே போல் ஆஸ்திரேலிய அணியும் உள்ளூரில் சிறப்பான வெற்றி சாதனைகளை வைத்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி முக்கிய வீரராக இருப்பார். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள்

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. தன்னம்பிக்கை மற்றும் நல்ல உத்வேகத்துடன் விளையாடி வருகிறார்கள். எனவே இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற முடியும் என்று நம்பலாம். அதில் சந்தேகம் இல்லை.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், கடந்த காலங்களை போல் தற்போதைய ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அச்சுறுத்தும் வகையில் இல்லை. இந்திய வீரர்களுக்கும் இங்குள்ள ஆடுகளங்கள் சாதகமாகவே இருக்கும். இந்திய பேட்ஸ்மேன்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். நிச்சயம் இந்த தொடர் கடும் சவால் நிறைந்ததாக அமையும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் தான் தற்போது ஒரே மாதிரியான தரத்துடன் விளையாடுகின்றன. அடுத்த இரு ஆண்டுகள் இந்த மூன்று அணிகள் இடையேத் தான் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க போட்டி நிலவும்.

டோனி குறித்து...

இந்திய விக்கெட் கீப்பர் டோனி இன்னும் சிறந்த வீரர் தான். ஆனால் அவரிடம் இருக்கும் ஆற்றலும், வேகமும் அப்படியே தொடர வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு இன்னும் 12 மாதங்கள் உள்ளன. வயதாகும் போது சில நேரங்களில் தங்களை தயார்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டு விடும். ஆனால் டோனியை பார்ப்பதற்கு தீவிர முனைப்புடன் நன்றாக இருப்பது போல் தான் தெரிகிறது.

இவ்வாறு ஸ்டீவ்வாக் கூறியுள்ளார்.