கிரிக்கெட்

கேப்டவுன் வறட்சிக்கு இந்திய கிரிக்கெட் அணி உதவி + "||" + Captain Drought Indian cricket team help

கேப்டவுன் வறட்சிக்கு இந்திய கிரிக்கெட் அணி உதவி

கேப்டவுன் வறட்சிக்கு இந்திய கிரிக்கெட் அணி உதவி
தென்ஆப்பிரிக்காவில் உள்ள கடற்கரை நகரமான கேப்டவுன் வரலாறு காணாத வறட்சியில் சிக்கி தவித்து வருகிறது.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவில் உள்ள கடற்கரை நகரமான கேப்டவுன் வரலாறு காணாத வறட்சியில் சிக்கி தவித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் அங்கு தண்ணீரே கிடைக்காத சூழ்நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது கேப்டவுன் நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒருநாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கேப்டவுன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, கேப்டவுன் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தன்னால் முடிந்த உதவியை அளிக்க முன்வந்தது. கேப்டவுனில் நடந்த 3–வது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர்கள் கையொப்பமிட்ட சீருடைகளை ஏலத்தில் விட்டு நிதி திரட்டினார்கள். இதில் கிடைத்த ரூ.5½ லட்சத்துக்கான தொகையை இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டுபிளிஸ்சிஸ் ஆகியோர் தென்ஆப்பிரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனத்திடம் வழங்கினார்கள். இந்த தகவலை அந்த தொண்டு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.