கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்இங்கிலாந்து அணி அபார வெற்றி + "||" + 2nd ODI against New Zealand The England team was a great victory

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்இங்கிலாந்து அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்இங்கிலாந்து அணி அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது ஒருநாள் கிரிக்கெட்


இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 223 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னெர் ஆட்டம் இழக்காமல் 63 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 50 ரன்னும், கிரான்ட்ஹோம் 38 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ்வோக்ஸ், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இங்கிலாந்து வெற்றி

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 37.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் மோர்கன் (62 ரன், 63 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் (63 ரன், 74 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசி வெற்றியை எளிதாக்கினர்.

அரைசதம் அடித்ததுடன் 2 விக்கெட்டும் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 9 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அந்த வெற்றிப்பயணத்துக்கு இங்கிலாந்து அணி நேற்று முட்டுக்கட்டை போட்டது.

3-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் நாளை மறுநாள் நடக்கிறது.