கிரிக்கெட்

பாகிஸ்தானில் கிரிக்கெட்: இந்திய அணியை அனுப்ப கிரிக்கெட் வாரியம் மறுப்பு + "||" + Cricket in Pakistan: Send the Indian team Cricket Board Denies

பாகிஸ்தானில் கிரிக்கெட்: இந்திய அணியை அனுப்ப கிரிக்கெட் வாரியம் மறுப்பு

பாகிஸ்தானில் கிரிக்கெட்: இந்திய அணியை அனுப்ப கிரிக்கெட் வாரியம் மறுப்பு
ஆசிய வளரும் நாடுகளுக்கான கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கராச்சி,

ஆசிய வளரும் நாடுகளுக்கான கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு இந்திய அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது. இதனால் இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேத்தி கருத்து தெரிவிக்கையில், ‘ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் விரைவில் கொழும்பில் நடைபெற இருக்கிறது. இதில் ஆசிய வளரும் நாடுகளுக்கான கோப்பை போட்டி மற்றும் இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டி ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது நிபந்தனையை பொறுத்தே அமையும். கொல்கத்தாவில் ஏப்ரல் மாதம் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நான் பங்கேற்பது குறித்து இந்திய அரசு விசா அளிப்பதை பொறுத்து தான் முடிவு மேற்கொள்ளப்படும்’ என்றார்.