கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ‘டோனி, பிராவோவிடம் இருந்து நுணுக்கங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ + "||" + The teams. Cricket match 'From Tony, Bravo I want to learn the nuances'

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ‘டோனி, பிராவோவிடம் இருந்து நுணுக்கங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்
‘டோனி, பிராவோவிடம் இருந்து நுணுக்கங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 28 வயதான மார்க்வுட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். சிறந்த போட்டியான ஐ.பி.எல்.லில் ஆடுவது மட்டுமின்றி அதில் சிறந்த அணியில் விளையாடும் வாய்ப்பை நான் பெற்று இருக்கிறேன். சிறந்த அணியில் இடம் பிடித்து விளையாடுவதை யார்? விரும்பாமல் இருப்பார்கள். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அதுபோல் எனது அணியின் வெற்றியில் நான் முக்கிய பங்கு வகிப்பேன் என்று நம்புகிறேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கிரிக்கெட் அறிவு மிக்கவர். நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி? என்பதில் கைதேர்ந்தவர். அவரிடம் இருந்து நெருக்கடியை சமாளித்து வெற்றிகரமான வீரராக (மேட்ச் வின்னர்) செயல்படுவது எப்படி என்பதை அனுபவபூர்வமாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு இந்த போட்டி தொடர் உதவிகரமாக இருக்கும். அதேபோல் சென்னை அணியில் முன்னணி ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ உள்ளார். அவரிடம் இருந்து ‘ஸ்லோ-பால்’ பந்து வீச்சு கலையை நேர்த்தியாக கற்றுக்கொள்ள ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

இவ்வாறு மார்க் வுட் கூறியுள்ளார். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய மார்க் வுட்டை சென்னை அணி ரூ.1½ கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. டோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்! சமூக வலைதளத்தில் வைரலாகிறது
டோனி அவுட் ஆனதை அதிர்ச்சி அடைந்த இளம் ரசிகர், மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்தியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
2. ஜார்க்கண்டில் அதிக வருமான வரி செலுத்துபவர் பட்டியலில் டோனி முதலிடம், ரூ.12.17 கோடி கட்டுவதாக தகவல்
ஜார்க்கண்டில் அதிக வருமான வரி செலுத்துபவர் பட்டியலில் டோனி முதலிடத்தில் உள்ளார். #Dhoni
3. டோனியை பின்பற்ற நினைத்து பல்ப் வாங்கிய பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான சர்ப்ராஸ் டோனியின் ஸ்டைலை பின்பற்ற நினைத்து அசிங்கப்பட்டுள்ளார். #SarfrazAhmed #MSDhoni
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா? ரவிசாஸ்திரி விளக்கம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். #MSDhoni #Dhoni
5. பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்துக்கு பேட்டை பரிசாக அளித்த டோனி
டோனி, பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்துக்கு தனது பேட்டை பரிசாக அளித்தார்.