கிரிக்கெட்

மும்பை லீக் கிரிக்கெட்: ரஹானே ரூ.7 லட்சத்திற்கு ஏலம் + "||" + Mumbai league cricket: Rahane is auction for Rs.7 lakh

மும்பை லீக் கிரிக்கெட்: ரஹானே ரூ.7 லட்சத்திற்கு ஏலம்

மும்பை லீக் கிரிக்கெட்: ரஹானே ரூ.7 லட்சத்திற்கு ஏலம்
மும்பை லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

மும்பை,

மும்பை லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் ஏலம் முறையில் ஒதுக்கப்பட்டனர். இதன்படி மும்பை வடக்கு அணி, இந்திய டெஸ்ட் துணை கேப்டன் ரஹானேவை ரூ.7 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. மும்பை வடகிழக்கு அணி சூர்யகுமார் யாதவை ரூ.7 லட்சத்திற்கு வாங்கியது. மும்பை வடமேற்கு அணி ரோகித் சர்மாவை ரூ.6 லட்சத்திற்கு பெற்றது. ஆனால் இலங்கையில் முத்தரப்பு 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா பங்கேற்க இருப்பதால் அவர் மும்பை லீக்கில் விளையாட வாய்ப்பில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் ரூ.5 லட்சத்திற்கு மும்பை வடக்குசென்ட்ரல் அணிக்கு ஒதுக்கப்பட்டார். ஜூனியர் உலக கோப்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்ட பிரித்வி ஷாவை மும்பை வடக்கு அணி ரூ.2.80 லட்சத்திற்கு வாங்கியது.