கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழா தள்ளிவைப்பு + "||" + IPL Cricket match opening ceremony

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழா தள்ளிவைப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழா தள்ளிவைப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழா தள்ளிவைப்பு செலவு தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.
மும்பை,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியின் தொடக்க விழா ஏப்ரல் 6-ந் தேதி மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது தொடக்க விழா ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு ஏப்ரல் 7-ந் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு இந்த மாற்றத்தை செய்துள்ளது. தொடக்க விழாவுக்கான செலவு தொகையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. தொடக்க விழாவுக்கான செலவு தொகை ரூ.50 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா முடிந்ததும் அதே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...