கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசையில் விராட் கோலி, புஜாரா நீடிப்பு; அஸ்வின் சரிவு + "||" + ICC Rankings: Virat Kohli, Cheteshwar Pujara remain steady, R Ashwin slips

ஐ.சி.சி. தரவரிசையில் விராட் கோலி, புஜாரா நீடிப்பு; அஸ்வின் சரிவு

ஐ.சி.சி. தரவரிசையில் விராட் கோலி, புஜாரா நீடிப்பு; அஸ்வின் சரிவு
ஐ.சி.சி. தரவரிசையில் விராட் கோலி, புஜாரா முறையே 2வது மற்றும் 6 இடங்களில் நீடிக்கிறார்கள்.

ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் முறையே இரண்டாவது  மற்றும் ஆறாவது இடங்களை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் அஸ்வின் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் ஆறாவது வீரராக பின்தங்கி உள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் 947 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கோலி 912 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து ஜோய் ரூட்,கனே வில்லியம்சன், டேவிட் வார்னர், ஆகியோர் உள்ளனர். 6 வது இடத்தில் புஜாரா உள்ளார். தொடர்ந்து  அசார் அலி, அலிஸ்டைர் கூக், ரோஸ் டைலர், ஹாசிம் அம்லா ஆகியோர் உள்ளனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 887 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் தொடர்ந்து கஜிஸோ ரபாடா, 3 வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளார்.தொடர்ந்து ஜோஷ் ஹேசில் வுவட், மிட்செல் ஸ்டார்க், உள்ளனர். 6 வது இடத்தில் அஸ்வின் உள்ளார். தொடர்ந்து வெர்னான் பிலெண்டர், நீல் வாக்னர், ரங்னாஹேரத், நாதன் லியோன் உள்ளனர்.