கிரிக்கெட்

முதல் டி20 கிரிக்கெட் போட்டி : இலங்கை அணி வெற்றி + "||" + First T20 cricket match: Sri Lanka team win

முதல் டி20 கிரிக்கெட் போட்டி : இலங்கை அணி வெற்றி

முதல் டி20 கிரிக்கெட் போட்டி :  இலங்கை அணி வெற்றி
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொழும்பு,

இலங்கையில் சுற்று பயணம் செய்து வரும் இந்தியா மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணிகள் முத்தரப்பு டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.  இதில், கொழும்பு நகரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் தவான் விளையாடினர்.

ரோகித் 4 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.  தவானுடன் இணைந்து விளையாடிய ரெய்னா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்த நிலையில் மணீஷ் பாண்டே ஆட்டத்தின் விறுவிறுப்பினை ஏற்றினார்.

இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது.  2 விக்கெட்டுகளுக்கு 9 ரன்கள் என்று இருந்த இந்திய அணி 3வது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்திருந்தது.  மணீஷ் (37), தவான் (90) மற்றும் ரிஷப் பேண்ட் (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  தினேஷ் கார்த்திக் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி வெற்றி பெற 175 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பின் களமிறங்கிய இலங்கை அணி  18.3 ஓவர்களில்  175 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.