கிரிக்கெட்

பிசிசிஐ புதிய ஊதிய ஒப்பந்தம்: இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார் டோனி! முகமது ஷமிக்கு இடமில்லை! + "||" + MS Dhoni Gets Lower Grade In New BCCI Player Contracts Mohammed Shami Left Out

பிசிசிஐ புதிய ஊதிய ஒப்பந்தம்: இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார் டோனி! முகமது ஷமிக்கு இடமில்லை!

பிசிசிஐ புதிய ஊதிய ஒப்பந்தம்: இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார் டோனி! முகமது ஷமிக்கு இடமில்லை!
பிசிசிஐயின் புதிய ஒப்பந்தம்படி கோலி, ஷிகர் தவான், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட 5 வீரர்கள் ஏ-பிளஸ் பிரிவில் இடம்பெற்று உள்ளனர். #BCCI #MSDhoni #MohammedShami
மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான கிரிக்கெட் வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்தத்தை அறிவித்து உள்ளது. பிசிசிஐ அறிவித்து உள்ள ஒப்பந்த விபரப்படி வீரர்கள் நிலையானது 4 பிரிவுகளில் பிரிக்கப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதல்நிலையாக ‘ஏ பிளஸ்’ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ. 5 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. 

பி பிரிவில் இடைபெறும் வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக வழங்கப்படும். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் மற்றும் அஸ்வின், பிசிசிஐ புதியதாக அறிமுகம் செய்து உள்ள ஏ பிளஸ் பிரிவில் இடம்பெறவில்லை. முகமது சமியும் முதல்நிலை பிரிவில் இடம் கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரிய அறிவிப்பின்படி முதல் நிலையான ஏ பிளஸ் பிரிவில் 5 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இதற்கிடையே மனைவியிடம் இருந்து புகாரை எதிர்க்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி எந்தஒரு பிரிவிலும் இடம்பெறவில்லை. அதிகமாக சம்பளம் வழங்கப்படும் ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய 5 வீரர்கள் இடம்பெற்று உள்ளார்கள். 

பிசிசிஐ 7 வீரர்களுக்கு ஏ பிரிவை கொடுத்து உள்ளது. டோனியை தவிர்த்து இந்த பிரிவில் அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, ரெகானே மற்றும் விருதிமான் சஹா இடம்பெற்று உள்ளனர். லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஹார்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் பி பிரிவில் இடம்பெற்று உள்ளார்கள். சி பிரிவில் கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, அக்ஸார் படேல், கரண் நாயர், சுரேஷ் ரெய்னா, பிரதீவ் படேல் மற்றும் ஜஸ்வந்த் யாதவ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.