டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கம்பீர் நியமனம்


டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கம்பீர் நியமனம்
x
தினத்தந்தி 7 March 2018 10:45 PM GMT (Updated: 7 March 2018 8:48 PM GMT)

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இடக்கை பேட்ஸ்மேனான கவுதம் கம்பீர் நேற்று அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார். அவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது.

முதல் 3 ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பீர் 2010-ம் ஆண்டில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் வகித்தார். அதன் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டார். மறுபடியும் டெல்லி அணியின் கேப்டனாக திரும்பி இருக்கும் 36 வயதான கம்பீர் கூறுகையில், ‘டெல்லி அணிக்கு மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த பொறுப்பு, எனது சொந்த ஊரான டெல்லி நகருக்கு நான் கிரிக்கெட் மூலமாக பிரதிபலனை அளிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் டெல்லி அணியை ஒரு சிறந்த அணியாக உருவாக்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் ஆற்றல் அபரிமிதமானது. இந்த ஆற்றலை சீரான ஆட்டத்திறனாக மாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. மிகப்பெரிய சாம்பியனான ரிக்கி பாண்டிங்குடன்(பயிற்சியாளர்) இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய விஷயமாகும்’ என்றார்.

Next Story