இலங்கையில் நடக்கும் கலவரங்கள் வருத்தமளிக்கிறது- கிரிக்கெட் வீரர் அஸ்வின் கவலை


இலங்கையில்  நடக்கும் கலவரங்கள் வருத்தமளிக்கிறது-  கிரிக்கெட் வீரர் அஸ்வின் கவலை
x
தினத்தந்தி 8 March 2018 7:46 AM GMT (Updated: 8 March 2018 7:46 AM GMT)

இலங்கையில் கண்டி மற்றும் அம்பாரா பகுதியில் நடக்கும் கலவரங்கள் தமக்கு வருத்தமளிப்பதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார். #AshwinRavichandran #SriLankaemergency

இலங்கை,

இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக நாடு முழுவதும் 10 நாட்கள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கண்டியில் பதட்டமான சூழல் நிலவுவதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. மொபைல் இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், இலங்கையில் மிகவும் வருந்தத்தக்க விஷயங்கள் நடக்கிறது. இலங்கை மிகவும் நல்ல நாடு, அங்கு மிகவும் நல்ல மக்கள் இருக்கிறார்கள், அங்கு நடக்கும் இந்த பிரிவினை பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். வாழ்வோம், வாழ விடுவோம். வேற்றுமைகளை புரிந்து கொண்டு கடந்து செல்வோம், நல்ல நிலை திருப்ப வேண்டிக் கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.


Next Story