கிரிக்கெட்

தியோதர் கோப்பை கிரிக்கெட் இந்திய- பி அணி சாம்பியன் + "||" + Theodore Cup cricket is the Indian-B team champion

தியோதர் கோப்பை கிரிக்கெட் இந்திய- பி அணி சாம்பியன்

தியோதர் கோப்பை கிரிக்கெட் இந்திய- பி அணி சாம்பியன்
தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய-பி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தர்மசாலா,

தியோதர் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா ‘பி’ - கர்நாடகா அணிகள் நேற்று மோதின. தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கர்நாடகா 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சமர்த் 107 ரன்களும், கவுதம் 76 ரன்களும் எடுத்தனர். மயங்க் அகர்வால் (14 ரன்), கேப்டன் கருண் நாயர் (10 ரன்) ஜொலிக்கவில்லை. தொடர்ந்து பேட் செய்த இந்திய ‘பி’ அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. கெய்க்வாட் (58 ரன்), ஈஸ்வரன் (69 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (61 ரன்), மனோஜ் திவாரி (59 ரன்) ஆகியோர் அரைசதம் விளாசி வெற்றியை எளிதாக்கினர்.