கிரிக்கெட்

டேவிட் வார்னருடன் மோதல் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்குக்கு அபராதம் + "||" + Confrontation with David Warner is fine for South African player Guindon de Cock

டேவிட் வார்னருடன் மோதல் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்குக்கு அபராதம்

டேவிட் வார்னருடன் மோதல் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்குக்கு அபராதம்
மோதலில் ஈடுபட்ட தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
போர்ட்எலிசபெத்,

டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 4-வது நாள் தேனீர் இடைவேளையின் போது வீரர்கள் ஓய்வு அறைக்கு திரும்புகையில், ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன் டேவிட் வார்னருக்கும், தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்குக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. வார்னர், டி காக்கை நோக்கி அடிப்பது போல் பாய்ந்தார். அவரை சக வீரர்கள் தடுத்து அழைத்து சென்றனர். வார்னரின் மனைவி குறித்து குயின்டான் டி காக் தவறுதலாக பேசியதால் தான் இந்த பிரச்சினை எழுந்ததாக ஆஸ்திரேலிய அணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்கின் குடும்பத்தினரை வார்னர் இழிவாக பேசினார் என்று தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகம் குற்றம் சாட்டியது.


இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவர் ஜெப் குரோவ் விசாரணை நடத்தியதில் இருவரும் விதிமுறையை மீறியது தெரியவந்தது. இதையடுத்து குயின்டான் டி காக்குக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக அளிக்கப்பட்டது.

குயின்டான் டி காக்குடன் ஏற்பட்ட மோதல் குறித்து டேவிட் வார்னர் நேற்று அளித்த விளக்கத்தில் ‘எனது மனைவி குறித்து குயின்டான் டி காக் வெறுக்கத்தக்க வகையில் விமர்சித்தார். இதனால் உணர்ச்சிவசப்பட்டு இந்த மாதிரி நடந்து விட்டேன். வீடியோ காட்சியை பார்க்கும் போது, எனது செயல்பாடு வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் எனது குடும்பத்தை குறித்து விமர்சிப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.