கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி அபார வெற்றி + "||" + The last One Day International against New Zealand

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்- இங்கிலாந்து அணி அபார வெற்றி
இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
கிறைஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து களம் புகுந்த இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, நியூசிலாந்து பவுலர்களை வறுத்தெடுத்தனர். ரன்மழை பொழிந்த அவர் 58 பந்துகளில் சதத்தை எட்டியதோடு வெற்றிக்கும் அடித்தளம் போட்டார். அவர் 104 ரன்களில் (60 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) டிரென் பவுல்ட் பந்தை அடித்து ஆட முயன்ற போது பேட் தவறுதலாக ஸ்டம்பை பதம் பார்த்ததால் ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டம் இழந்தார்.


அடுத்த சில ஓவர்களில் அலெக்ஸ் ஹாலெஸ் 61 ரன்னிலும், கேப்டன் மோர்கன் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 32.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக வசப்படுத்திய 6-வது ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா : பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். இதனால் பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.
2. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? - 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்குகிறது.
3. இங்கிலாந்து: விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு சிறை
இங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
4. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி படுதோல்வி ஏமாற்றத்துடன் விடைபெற்றார், ஹெராத்
காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 462 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.