கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று- சூப்பர் சிக்ஸ் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் + "||" + World Cup Cricket Qualification Round - West Indies at Super Six round

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று- சூப்பர் சிக்ஸ் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று- சூப்பர் சிக்ஸ் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றை உறுதி செய்தது.
ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றை உறுதி செய்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதில் இருந்து இறுதிப்போட்டியை எட்டும் இரு அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

நேற்று ஒரே நாளில் 4 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ஹராரே நகரில் ஏ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. ரோவ்மன் பவெல் 101 ரன்களும் (100 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் ஜாசன் ஹோல்டர் 54 ரன்களும் விளாசினர். கிறிஸ் கெய்ல் 14 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து களம் கண்ட அயர்லாந்து அணி 46.2 ஓவர்களில் 205 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை ருசித்த வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

இதே போல் ஜிம்பாப்வே அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும், நெதர்லாந்து அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவையும் தோற்கடித்தது.

இன்னொரு முக்கியமான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நேபாளம் 49.5 ஓவர்களில் 194 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 3 ஆட்டங்களில் தோற்றிருந்த ஆப்கானிஸ்தானுக்கு இது தான் முதல் வெற்றியாகும். லீக் சுற்றை முடித்து விட்ட ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர் சிக்ஸ் சுற்று வாய்ப்பு கிடைக்குமா? என்பது நாளை தான் தெரிய வரும். அதாவது நேபாளம்- ஹாங்காங் இடையிலான ஆட்டத்தில் நேபாளம் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. ஹாங்காங் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் வெளியேற்றப்படும்.

நாளை நடைபெறும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் அயர்லாந்து-ஐக்கிய அரபு அமீகரம், ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து, நெதர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ், ஹாங்காங்-நேபாளம் ஆகிய அணிகள் மோதுகின்றன.