கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- டிவில்லியர்சின் அதிரடியால் முன்னிலை பெற்றது தென்ஆப்பிரிக்கா + "||" + South Africa, with the 2nd Test Against Australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- டிவில்லியர்சின் அதிரடியால் முன்னிலை பெற்றது தென்ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- டிவில்லியர்சின் அதிரடியால் முன்னிலை பெற்றது தென்ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் - டிவில்லியர்சின் அதிரடி அரைசதத்தால் முன்னிலை பெற்றது தென்ஆப்பிரிக்கா.
போர்ட்எலிசபெத்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் டிவில்லியர்சின் அதிரடியான அரைசதத்தால் தென்ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 243 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா 5 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.


இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. விக்கெட் தடுப்பாளராக இறக்கப்பட்ட ரபடா 29 ரன்களில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் டீன் எல்கரும், அம்லாவும் ஜோடி சேர்ந்து நிதானமாக செயல்பட்டனர். ஆஸ்திரேலியாவின் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ தாக்குதலை திறம்பட சமாளித்த இவர்களை உணவு இடைவேளை வரை அசைக்க முடியவில்லை. நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்த இந்த ஜோடி அடுத்தடுத்த ஓவர்களில் நடையை கட்டியது. அம்லா 56 ரன்களிலும் (148 பந்து), டீன் எல்கர் 57 ரன்களிலும் (197 பந்து) வெளியேறினர்.

அடுத்து இறங்கிய டிவில்லியர்ஸ் தாக்குப்பிடித்து ஆடினாலும், மறுமுனையில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (9 ரன்) டி புருன் (1 ரன்), குயின்டான் டி காக் (9 ரன்) ஒற்றை இலக்கில் வீழ்ந்ததால் தென்ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி உருவானது. அப்போது அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது.

விக்கெட் சரிவுக்கு மத்தியில் அதிரடி காட்டிய டிவில்லியர்ஸ் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டியடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அவருக்கு பிலாண்டர் ஒத்துழைப்பு கொடுக்க ஒரு வழியாக ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா முந்தியது.

2-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. டிவில்லியர்ஸ் 74 ரன்களுடனும் (81 பந்து, 14 பவுண்டரி), பிலாண்டர் 14 ரன்களுடனும் (39 பந்து) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

நேற்றைய ஆட்டத்தின் போது தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் பேண்டு வாத்தியங்களை இசைத்து உற்சாகத்தில் மிதந்தனர். இந்த இரைச்சல் தங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஆஸ்திரேலிய வீரர்கள் புகார் கூறியதால் இரண்டு முறை ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இனி வரும் நாட்களில் பேண்டு இசைக்கருவியை மைதானத்திற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுமா? என்பது சந்தேகம் தான்.