கிரிக்கெட்

இரானி கோப்பை கிரிக்கெட் - ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு + "||" + Irani Cup Cricket - replaces Jadeja with Aswin

இரானி கோப்பை கிரிக்கெட் - ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு

இரானி கோப்பை கிரிக்கெட் - ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு
இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

ரெஸ்ட் ஆப் இந்தியா- ரஞ்சி சாம்பியன் விதர்பா அணிகள் இடையே இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14-ந்தேதி நாக்பூரில் (5 நாள் ஆட்டம்) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான கருண் நாயர் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விலாபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். காயத்தால் அண்மையில் நடந்த தியோதர் கோப்பை தொடரில் விலகி ஓய்வு எடுத்த அஸ்வின் உடல்தகுதியை எட்டிவிட்டதால் முதல்தர போட்டிக்கு திரும்புகிறார்.