கிரிக்கெட்

இலங்கை கேப்டன் சன்டிமாலுக்கு 2 போட்டியில் விளையாட தடை + "||" + Sri Lankan captain Sandimal has been banned from playing in 2 matches

இலங்கை கேப்டன் சன்டிமாலுக்கு 2 போட்டியில் விளையாட தடை

இலங்கை கேப்டன் சன்டிமாலுக்கு 2 போட்டியில் விளையாட தடை
இலங்கை கேப்டன் சன்டிமாலுக்கு 2 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 214 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை பவுலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 4 ஓவர்கள் தாமதமாக வீசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து இலங்கை அணியின் கேப்டன் சன்டிமாலுக்கு 2 போட்டியில் விளையாட தடையும், மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதமும் ஐ.சி.சி. போட்டி நடுவர் கிறிஸ் பிராட் விதித்துள்ளார். இதனால் சன்டிமால் அடுத்த இரு லீக் ஆட்டங்களில் ஆட முடியாது. ஆல்-ரவுண்டர் திசரா பெரேரா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு ஓவர் மெதுவாக வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அணியின் கேப்டன் மக்முதுல்லாவுக்கு 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.