கிரிக்கெட்

நிடாஹஸ் கோப்பை டி20 கிரிக்கெட் : ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய முதல் இந்திய வீரர் கே.எல்.ராகுல் + "||" + Nidahas Trophy: KL Rahul becomes first Indian to be dismissed hit wicket in T20Is

நிடாஹஸ் கோப்பை டி20 கிரிக்கெட் : ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய முதல் இந்திய வீரர் கே.எல்.ராகுல்

நிடாஹஸ் கோப்பை டி20 கிரிக்கெட் : ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய முதல் இந்திய வீரர் கே.எல்.ராகுல்
நிடாஹஸ் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய முதல் இந்திய வீரர் ஆனார்.
இலங்கை,

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் இடையேயான முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் இலங்கை அணியை சந்தித்தது. இந்திய அணியில் ரிஷாப் பான்ட் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார்.


இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.  மென்டீஸ் வீசிய 10-வது ஓவரில் பந்தை பின்பக்கமாக வந்து அடிக்க முயன்றார். அப்போது அவரது கால் ஸ்டம்பில் பட்டதால் ‘ஹிட்’ விக்கெட் ஆனார்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர் லோகேஷ் ராகுல் ஆவார். அவர் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச அளவில் ‘ஹிட்’ விக்கெட்டான 9 பேர்களில் 10-வது வீரராக ராகுல் இணைந்தார். இதற்கு முன்பு டி வில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), மிஸ்பா-உல்-ஹக், முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) சண்டிமால் (இலங்கை) உள்பட 9 வீரர்கள் ‘ஹிட்’ விக்கெட் ஆகி இருந்தனர்.

டெஸ்ட் போட்டியில் லாலா அமர்நாத்தும் (1949), ஒருநாள் போட்டியில் நயன் மோங்கியாவும் (1995) ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர்களாக இருந்தனர். அந்த வரிசையில் லோகேஷ் ராகுல் இணைந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரிவியூவை வீணாக்கிய கே.எல்.ராகுலை டுவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் ரிவியூவை வீணாக்கினார்.
2. ‘மனதும், உடலும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிரடி வெளிப்படும்’ - கே.எல்.ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக அதிரடி காட்டுபவர், கே.எல்.ராகுல். ஐ.பி.எல். போட்டிகளில் ஆரம்பித்த இவரது அதிரடி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் தொடர்கிறது.